• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

காவிரி: அ.தி.மு.க எம்.பி முத்துகருப்பன் ராஜினாமா

  முத்துமாரி   | Last Modified : 02 Apr, 2018 10:56 am


காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க எம்.பி முத்துக்கருப்பன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள், இளைஞர்கள், விவசாயிகள் என பலர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். அதன்படி இன்று முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், " 2 ஆண்டுகள் பதவியில் இருந்தாலும், மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் செய்யப்படும் அநீதியை மனம் ஏற்கவில்லை. மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் மிகுந்த மனவேதனையும், மிகுந்த மன உளைச்சலுடனும் ராஜினாமா செய்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

ராஜினாமா கடிதத்தில் காரணத்தை குறிப்பிடுவது, நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால் முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதம் ஏற்படுவதில் சிக்கலாகியுள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு மாயாவதியின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க எம்.பி முத்துக்கருப்பன் ராஜினாமா கடிதம் கீழே...



குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close