லோக்சபா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் ராஜினாமா!

  முத்துமாரி   | Last Modified : 06 Apr, 2018 05:01 pm


ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் 5 பேரும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் எனக்கூறி மத்திய அரசு அதை நிறைவேற்றாததைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராடி வருகின்றனர். இதற்காக தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. தெலுங்கு தேசம் கட்சியினரும் தங்கள் பதவியை  செய்துள்ளனர். 

இந்த நேரத்தில், நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு அக்கட்சியின் எம்.பிக்களுக்கு இன்று வலியுறுத்தியுள்ளார். இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் அவையை முடக்கும் நோக்கில் தெலுங்கு தேசம் கட்சி போராட்டம் நடத்தி வருகின்றது. 

அதே நேரத்தில் ஆந்திராவின் எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபாவில் 5  எம்.பிக்கள்  உள்ளனர். இவர்கள் 5 பேரும் இன்று தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபாவில் 5 எம்.பி.க்கள் உள்ளனர். மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.பிக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தினை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அளித்தனர்.

ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் ஆந்திர கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் அவை முடங்கியுள்ளதால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close