மோடி தலித்துகளுக்கு எதிரானவர்: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2018 03:30 pm

மோடி தலித்துகளுக்கு எதிரானவர் என்றும் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

எஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரம், வங்கிமோசடி உள்ளிட்ட இந்தியாவில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்காக பல்வேறு  மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. ராஜ்காட்டில் நடைபெறும் இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:

நாங்கள் இப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.கவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். அவர்களின் கொள்கைகளை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்துவோம். பிரதமர் மோடி தலித்துகளுக்கு எதிரானவர் என்பது இனியும் ரகசியமாக இருக்கப்போவதில்லை. இந்திய மக்கள் அனைவரும் அதனை புரிந்துக்கொண்டனர். காங்கிரஸுக்கு எதிரான பா.ஜ.கவின் மனநிலையை எங்களது கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்தி நாங்கள் மிக பெரிய வெற்றியை அடைவோம் என்று தெரிவித்தார்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close