15 நிமிடத்துக்கு ஒரு குழந்தைக்கு பாலியல் கொடுமை அதிர்ச்சி ரிப்போர்ட்

  Sujatha   | Last Modified : 20 Apr, 2018 11:25 am


இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக குழந்தைகளின் உரிமைக்கான தான்னார்வ அமைப்பான சி.ஆர்.ஒய் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த பாலியல் குற்றங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் பதிவாகி இருப்பது இந்த ரிப்போர்ட்டில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2006–ம் ஆண்டு 18,967 என இருந்த இந்த  குற்ற செயல்கள், 2016ம் ஆண்டில்  1,06,958 ஆக அதிகரித்துள்ளது.  இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் 500 சதவீதம் அதிகரித்து இருப்பதாக இந்த அறிக்கையில் உள்ளது.

இந்த கணக்கியலின் அடிப்படையில்  ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பாலியல்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக குழந்தைகள் நல அமைப்பு (CRY) வெளியிட்ட அறிக்கையில் உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close