சுற்றுப்பயணம் நிறைவு; டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

  Sujatha   | Last Modified : 21 Apr, 2018 08:32 am

ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைப்பெற்ற மாநாடுகளில் பங்கேற்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.

கடந்த திங்கள் கிழமை இந்தோ-நார்டிக்(ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு)  மாநாட்டில் பங்கேற்க ஸ்வீடன் சென்ற பிரதமர் மோடிக்கு ஸ்வீடன் நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோவன் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்ற மோடி, ஸ்வீடன் சுற்றுப்பயணத்தை முடித்து இங்கிலாந்து நடைபெற்ற 25-வது காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டார். 

காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய எலிசபெத் ராணி காமன்வெல்த் கூட்டமைப்பை தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் தலைமை தாங்குவார் என கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாநாட்டை முடித்துக்கொண்டு, ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, பெர்லினில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசினார். இதையடுத்து, தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார். இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close