நிபுணர்கள் போல பேசி கட்சியின் மதிப்பை குறைக்க வேண்டாம்: பா.ஜ.கவினருக்கு மோடி அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2018 08:32 am

அனைத்து தெரிந்த நிபுணர்களை போல பேச வேண்டாம் என்று பா.ஜ.க கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.  

நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பா.ஜ.க கட்சியினர் தெரிவித்து வரும் கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. குறிப்பாக காத்துவா, உன்னாவ் பகுதியில் நடந்த வன்கொடுமைக்குறித்து பா.ஜ.கவினரின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில் பிரதமர் மோடி பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் காணொலி மூலம் இதுகுறித்து பேசினார். அப்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த விவகாரத்தையும் முழுமையாக அறியாமல் நிபுணர்கள் போல கேமராவை பார்த்தவுடன் பேசத்தொடங்கி விடுகிறீர்கள். மைக் முன்பு தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். 

ஊடகங்கள் இதை இப்படி திரித்து கூறிவிட்டன. வேறு விதமாக செய்தி வெளியிட்டு விட்டன என கட்சியினர் குறைகூறி வருகின்றனர். ஆனால் சர்ச்சைக்கு தேவையான மசாலாக்களை நாம் தான் வழங்குகிறோம் என்பதை உணர வேண்டும். ஊடகங்கள் தங்கள் பணியை செய்கின்றன. எனவே ஊடகங்களை குறை கூறுவதை கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனி ஊடகங்கள் மத்தியில் பொறுப்புடன், தெரிந்தவர்கள் மட்டுமே பேச வேண்டும். அனைவரும் பேசினால் கட்சியின் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்து விடும் என்று தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close