மோடி அறிவித்த ரூ.15 லட்சம் எப்போது வரும்? பதில் அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்

  Sujatha   | Last Modified : 24 Apr, 2018 09:11 am

,

கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த 15 லட்ச ரூபாய், மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு எப்போது  மாற்றப்படும் என்ற கேள்விகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் "தகவல்" என்ற வரையறைக்குள் வரவில்லை, மத்திய தகவல் கமிஷனுக்கு பிஎம்ஓ தெரிவித்துள்ளது. 

ஆர்.டி.ஐ விண்ணப்பதாரர் மோகன் குமார் ஷர்மா என்பவர்  நவம்பர் 26, 2016 அன்று மத்திய தகவல் ஆணையத்தில் மனுவை தாக்கல் செய்தார். (பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவித்த 18 நாட்களுக்கு பிறகு). அதில் மோடி வாக்குறுதி அளித்த படி  ஒவ்வொரு குடிமகனின் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் எப்போது போடப்படும்?  பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி பத்திரிகைகளுக்கு முன்கூட்டியே எப்படி தெரிந்தது? என்றும் அவர் கேள்விகள் கேட்டிருந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தலைமை தகவல் ஆணையாளர் ஆர்.கே.மாத்தூர் "தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 2(எப்) பிரிவுப்படி, ‘தகவல்’ என்ற வரம்புக்குள் இந்த கேள்விகள்  வராது என்று, பிரதமர் அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் இந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ளதாகவும்"  அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், ​​வெளிநாட்டிலிருந்து கருப்பு பணத்தை மீட்கும் போது ஒவ்வொரு இந்திய குடிமகனுடைய வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close