ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு- காயமின்றி தப்பினார்!

  Sujatha   | Last Modified : 27 Apr, 2018 07:22 am


காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்த விமானத்தில் தீடீர் என இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதில் ராகுல் உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.   

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 12-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை ஒட்டி அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டில்லியில் இருந்து ஹூப்ளி நோக்கி சிறிய ரக தனியார் விமானத்தில் ராகுல்காந்தி பயணம் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் கவுசல் வித்யார்த்தி மற்றும் 3 பேர் பயணம் செய்தனர்.  

அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை சரி செய்ய விமானி முயற்சித்தும் அதில் ஏற்பட்ட பிரச்னையை கண்டறிய முடியவில்லை. இதனை தொடர்ந்து விமானத்தை தரை இறக்க விமானி முயற்சித்தார் ஆனால் இரண்டு முறை அது தோல்வியிலேயே முடிந்தது. தொடர்ந்து ஒரு புறமாக தரையில் சாய்ந்தவாறு சென்ற விமானம் இறுதியாக சுமார் 400 முதல் 500 மீட்டர் உயரத்தில் இருந்து தானாக விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து  உரிய விசாரணை நடத்த வேண்டும் என கவுசல் வித்யார்த்தி, கர்நாடகா டிஜிபி மற்றும் ஐஜி.யிடம் புகார் அளித்துள்ளார்.  

இது குறித்து டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close