பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மே 8-ந்தேதி போராட்டம்

  Sujatha   | Last Modified : 28 Apr, 2018 07:07 am


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற மே 8-ந்தேதி போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இதனை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையில் கிடுகிடு  மாற்றம் என மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையால்   பொது மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே இந்த விலை உயர்வை திரும்ப பெறுமாறு  மத்திய அரசுக்கு, அரசியல் கட்சிகள்கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாடு முழுவதும் வருகிற மே 8-ந்தேதி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அந்த கட்சி வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கான தொகைக்கு வரி விலக்கு அளிக்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது. இதில் பிற ஜனநாயக மற்றும் மக்கள் ஆதரவு அமைப்புகளும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என கூறப்பட்டு உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close