செங்கோட்டை இனி டால்மியா வசம்: கார்ப்பரேட் தத்தெடுப்புக்கு கிளம்பும் எதிர்ப்பு

  Padmapriya   | Last Modified : 29 Apr, 2018 12:28 pm

டெல்லியில் உள்ள செங்கோட்டை பராமரிப்புக்காக கார்ப்பரேட் நிறுவனமான டால்மியா பாரத் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் செங்கோட்டையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும். 

பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும் பொறுப்பு தி டால்மியா பாரத் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏலமுறையில் அளிக்கப்பட்ட இந்தப் பராமரிப்பு செலவுக்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.5 கோடி மத்திய அரசு வழங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு போடப்பட்டது.

ஆண்டுக்கு ரூ.1 கோடி வீதம் 5 ஆண்டுக்கு ரூ.25 கோடியை டால்மியா நிறுவனம் பெற்றுக்கொண்டு டெல்லி செங்கோட்டையை பராமரிக்க இருக்கிறது. இந்தியாவில், பாரம்பரிய சின்னத்தைப் பராமரிக்கும் பொறுப்பை கார்ப்பரேட் நிறுவனம் கையில் எடுப்பது இதுவே முதல் முறையாகும். 

இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.  செங்கோட்டை பதினேழாவது நுற்றாண்டில் ஷாஜகானால் கட்டப்பட்டது.

''நாட்டின் நினைவுச் சின்னங்களை பராமரிக்க கூட அரசுக்கு நிதி ஒதுக்க முடியதா?  ஆளும் பாரதிய ஜனதா அரசும் மோடியும் இந்தச் செயலுக்காக வெட்கப்பட வேண்டும். செங்கோட்டையை பராமரிக்க கூட நிதி ஒதுக்க முடியாத இவர்கள் எப்படி நாட்டை வழி நடத்துவார்கள்'' என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ''சுதந்திர தினத்தின்போது, இந்திய தேசியக் கொடி இங்குதான் ஏற்றப்படும். செங்கோட்டை இந்தியாவின் அடையாளம். இதையும் கூட தனியாருக்கு தாரை வார்ப்பது வெட்கக் கேடானது. இன்று இந்தியாவின் கறுப்பு தினம் என்று கடுமையாக கண்டித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close