பிரதமர் மோடியின் ஆட்சி மீது சோனியா, ராகுல் கடும் தாக்கு!

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2018 06:24 pm


பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், சாமானிய மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளனர். 

"பொதுமக்களிடம் பல வாக்குறுதிகளை பிரதமர் மோடி வழங்கினார். ஆனால், அதில் எதையுமே நிறைவேற்றவில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார் ராகுல் காந்தி. 

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடியின் ஆட்சியில் நடுத்தர மக்கள், ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோரும் அவதிப்படுவதாக கூறியுள்ளார். "சமீப காலமாக நம் நாட்டில் கடும் வன்முறை மற்றும்  வெறுப்பு அதிகமாகியுள்ளன. அனைத்து மக்களும் இணைந்து இந்த ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும்" என்றார் சோனியா.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close