டெல்லியில் ராகுலை சந்தித்த திருமாவளவன்!!

  Sujatha   | Last Modified : 02 May, 2018 06:20 am

 

டெல்லியில் நேற்று(செவ்வாய் கிழமை)  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது  இல்லத்தில் சந்தித்து, அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வரும்படி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். 

இச்சந்திப்பு குறித்து திருமாவளவன் கூறியதாவது, "இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மதவாத சக்திக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை அவரிடம் தெரிவித்தேன். மேலும், தலித் வன்கொடுமை சட்டத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சி காட்டிய எதிர்வினைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்.  தமிழகத்தில் பா.ஜனதாவை தனிமைப்படுத்தி தி.மு.க. தலைமையில் தோழமை கட்சிகள் இணைந்து நிற்கின்றன.

அதே நிலை தேசிய அளவிலும் இருந்தால் பா.ஜனதாவை தனிமைப்படுத்த முடியும். ஆட்சிக்கு வராமல் தடுக்கவும் முடியும். எனவே, காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடதுசாரிகள் போன்ற எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டியது வரலாற்று தேவையாக உள்ளது. தேர்தல் நெருங்கும்போது அது சாத்தியமாகும் என்று நம்புகிறேன். தமிழக அரசு ஆட்சியை தக்க வைப்பதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதன்காரணமாக மக்களிடம் இருந்து அ.தி.மு.க. நாளுக்குநாள் அன்னியப்பட்டு வருகிறது என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார். 

முன்னதாக திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close