கர்நாடக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பா.ஜ.க; முக்கிய 10 அம்சங்கள்

  Newstm Desk   | Last Modified : 04 May, 2018 03:02 pm


கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜ.க தேர்தல் அறிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 12ம் தேதி  நடைபெற இருக்கிறது. கர்நாடகாவில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, குஜராத் தேர்தலுக்கு பிறகு கர்நாடக தேர்தலில் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்த ராமையாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே நிலவும் போட்டியாக தான் இந்த தேர்தல் கருதப்படுகிறது.

சமீபத்தில் காங்கிரஸ் அரசு கர்நாடக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதையடுத்து இன்று பா.ஜ.க தரப்பில் எடியூரப்பா தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இன்று நடந்த அறிக்கை வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பா.ஜ.க  மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

O பா.ஜ.க அரசு தொடர்ந்து விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு செயல்திட்டங்களை கொண்டு வருகிறது. கர்நாடகாவில் விவசாயிகளின் நலனை மேம்படுத்த ரூ.1 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். 

O பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு என தனிபட்ஜெட் கொண்டுவரப்படும். கர்நாடக நீர்பாசனத் திட்டத்திற்கு ரூ. 1,50,000 கோடி அளவிலான தொகை ஒதுக்கப்படும். 

O "Negilayogi Yojane" என்ற புதிய திட்டத்தின் கீழ் 20 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.10,000 என்ற அளவில் உதவித்தொகை வழங்கப்படும். 

O அனைத்து பகுதிகளிலும் விவசாயம் செய்ய நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

O  கர்நாடகாவில் அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

O வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள். 

O பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடி தீர்வு காண 1000 பெண் போலீசார்கள் நியமனம். 

O கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்

O வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ. 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் உதவித்தொகை வழங்கப்படும். 

O கர்நாடகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மின் விநியோகம் கிடைக்க வழிவகை செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close