கர்நாடகாவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வளப்படுத்த வேண்டும்: மோடி

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 08:50 am


கர்நாடகாவின் இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வளப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியுள்ளது. இது ஒரு சட்டசபை தேர்தலாக மட்டும் அல்லாமல் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.மேலும் இந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டால் தென்னிந்தியாவில் பா.ஜ.க கால் பதித்து விடும். 

இந்நிலையில் பிரதமர் மோடி கர்நாடக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள். இந்த தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்நாடகாவின் இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வளப்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close