மோடி தொடங்கி வைத்ததை யோகி முடித்து வைத்தார்!

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 01:07 pm


ஜானக்பூரில் இருந்து அயோத்தியா வந்த இந்திய- நேபாளம் இடையேயான முதல் பேருந்து சேவையை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று(மே.11) நேபாளம் சென்றார். அப்போது இந்தியா - நேபாளம் இடையே முதல் நேரடி பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷர்மா ஒளி ஆகிய இருவரும் இணைந்து கொடியசைத்து தொடக்கி வைத்தனர். மேலும் இதுகுறித்து மோடி, "இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். இதன்மூலம் இந்தியா - நேபாளம் இடையே சுற்றுலா மேம்படும்" என தெரிவித்தார். 


நேபாளத்தின் ஜானக்பூரில் இருந்து அயோத்தியாவுக்கு விடப்பட்ட இந்த பேருந்து  இன்று காலை அயோத்தியா வந்தது.  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேருந்தை வரவேற்றார். பேருந்தில் பயணித்தவர்களை வரவேற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

ஜானக்பூர் மற்றும் அயோத்தியா ஆகிய இடங்களில் தான் ராமாயணம் நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close