கர்நாடகத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24% வாக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 01:07 pm


கர்நாடகத் தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 24% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 

கர்நாடகா சட்டசபை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றுவ வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் காலை 9 மணி அளவில் 10.4% என்ற அளவிலும், காலை 11 மணி வரை 24% என்ற அளவிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கிய சில நேரங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. பகால்கோட், ஹனுமந்த் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜாஜி நகர் தொகுதியில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி ஏற்றி சில மணி நேரம் வாக்குப் பதிவு நடந்தது. 

பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று காலை சிமோகா தொகுதியில் உள்ள ஷிகாரிபுரா வாக்குச் சாவடியில் வாக்கைப் பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்" என்றார். 

அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது மனைவி, மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹொலினரசிபுரா பகுதியில் உள்ள பூத்தில் வாக்களித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close