பிரதமர் மோடி மிரட்டுகிறார்: குடியரசுத்தலைவருக்கு மன்மோகன் சிங் and கோ கடிதம்

  Newstm Desk   | Last Modified : 30 May, 2018 11:40 pm

பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக தேர்தலுக்காக அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியை உண்மைக்கு புறம்பாகவும், தகாத வார்தைகளாலும் விமர்சித்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். 

அதில், "பிரதமர் மோடி தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசி வருகிறார். கர்நாடக தேர்தல் பரப்புரையின் போது அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. ஒரு பிரதமராக இருந்துகொண்டு இவ்வாறு பேசக்கூடாது. இதுவரை பிரதமராக இருந்தவர்கள் தங்களது கட்சியின் சார்பில் பேசும்போது மரியாதையையும், கண்ணியத்தையும் கடைபிடித்துள்ளனர். மேலும், பிரதமர் மோடி அதனை கடைபிடிக்கவில்லை. இதனால் எதிர் கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் பேசுவதை நிறுத்துமாறு மோடிக்கு குடியரசுத்தலைவர் அறிவுறுத்த வேண்டும். எந்த கட்சித்தலைவர்களையும் அவர் அவ்வாறு பேசக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக மே 6ம் தேதி கர்நாடகா பரப்புரையின் போது, "காங்கிரஸ் தலைவர்களே, நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.. இது பா.ஜ.க அரசு. உங்கள் வரம்பை நீங்கள் கடந்துவிட்டீர்கள் எனில் அனுபவிப்பீர்கள்" எனப் பேசியுள்ளார்.

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close