மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி?

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 03:43 pm


மதச்சார்பற்ற ஜனதா தளம் -  காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. 

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பாஜக வெற்றி பெரும்பான்மை பெற்ற சூழ்நிலையில் பா.ஜ.க இறக்கம் கண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக - 104, காங்கிரஸ் -76 ம.ஜ.த-39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து கர்நாடகாவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், பா.ஜ.க அல்லது காங்கிரஸ் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

பா.ஜ.கவின் வியூகத்தை தடுக்க, காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவை, காங்கிரஸ் கோரிய நிலையில், அதற்கு ம.ஜ.த ஒப்புக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசுவாமி கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்பார் என கட்சிகள் தெரிவித்துள்ளன. துணை முதல்வர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close