நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற அ.தி.மு.க வேட்பாளர்கள்!

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 04:27 pm


கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பா.ஜ.க முன்னிலை பெற்று வந்தாலும் பெரும்பான்மையை இழந்த நிலையில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி, பாஜக -104, காங்கிரஸ் -78, ம.ஜ.த -37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. 

இந்த சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க 3 தொகுதிகளில் போட்டியிட்டது. பெங்களூரிலுள்ள காந்திநகர், கோலார் மாவட்டத்திலுள்ள தங்கவயல், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. அதுவும் கட்சியின் சின்னமான இரட்டை இலையில் போட்டியிடவில்லை. சுயேச்சை வேட்பாளர்களின் சின்னங்களின் மூலமாக போட்டியிட்டது. 

இதில் அ.தி.மு.க வேட்பாளர்கள் மோசமான வாக்குகளையே பெற்றுள்ளனர். காந்திநகரில் போட்டியிட்ட யுவராஜ், இன்று பிற்பகல் நிலவரப்படி 435 வாக்குகளை பெற்றிருந்தார். ஹனூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் விஷ்ணுகுமார், வெறும் 135 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.  தங்கவயல் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் 666 வாக்குகளை பெற்றுள்ளார். இவர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close