ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டார் குமாரசுவாமி

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 04:56 pm


கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த குமாரசுவாமி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். 

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்து குமாரசுவாமியிடம் ஆதரவு கோரியது. அந்த ஆதரவை ஏற்றதாக குமாரசுவாமி அறிவித்துள்ளார். குமாரசுவாமியே முதல்வர் பதவியில் அமர்த்த காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து ஆளுநரை சந்திக்க குமாரசுவாமி நேரம் கேட்டுள்ளார். இன்று மாலை 5.30 - 6 மணிக்குள் சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக அவர் காங்கிரஸூடனான கூட்டணி குறித்து தனது தந்தையும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடாவுடன் ஆலோசனை நடத்தினார். 

தற்போதைய நிலவரப்படி, பாஜக -104, காங்கிரஸ் -78, ம.ஜ.த -37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. 

அதேபோல் ஜி.பரமேஸ்வரா தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் கவர்னரை சந்திக்க சென்று அனுமதி மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.