• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாள் அவகாசம்

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 05:36 pm


கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் எடியூரப்பாவுக்கு 7 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். 

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.  தொடர்ந்து பா.ஜ.க முன்னிலை பெற்று வந்தாலும் பெரும்பான்மையை இழந்த நிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக -104, காங்கிரஸ் -78, ம.ஜ.த -37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. இதையடுத்து பாஜக கர்நாடகத் தேர்தலில் தனிப்பெரும் வெற்றி பெற்றுள்ளதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா ஆளுநரிடம் கோரிக்கைவ் விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.கவின் எடியூரப்பாவிற்கு 7 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். 

முன்னதாக கர்நாடகாவில் பா.ஜ.கவின் வியூகத்தை தடுக்க, காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவை கோரியது. முதல்வர் பதவியையும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.அதன்படி,  காங்கிரஸ் -ம.ஜ.த கூட்டணியில் கர்நாடகாவில் ஆட்சி அமையும் வாய்ப்பு உருவானது.  ம.ஜ.தவின் குமாரசுவாமியும் தற்போது ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close