காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் பா.ஜ.கவில் இருந்து அழைப்பு: டி.கே.சிவகுமார்

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 02:30 pm


காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் பா.ஜ.கவில் இருந்து போனில் அழைப்பு வந்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க - 104 காங்கிரஸ் -78, மதச்சார்பற்ற ஜனதா தளம் -37, சுயேச்சை -3 இடங்கள் பெற்றுள்ளன. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. மற்றொரு பக்கம் காங்கிரஸ் -ம.ஜ.த கூட்டணி உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் பா.ஜ.க தலைவர்களிடம் இருந்து போனில் அழைப்பு வந்துள்ளது என காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்-மஜத கூட்டணியை உடைத்து, காங்கிரஸ் எம்.எ.ல்.ஏக்களை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 78 காங்கிரஸ் எம்.எ.ல்.ஏக்களுக்கும் பா.ஜ.க தலைவர்கள் போனில் அழைப்பு விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்தார். இது அரசியல் சூழ்நிலையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சித்த ராமையா தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு 12 எம்.எல்.ஏக்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

78 எம்.எல்.ஏ-க்கள் என்றால், அதில் சித்தராமையாவும் அடங்குவார். அப்படி என்றால் அவருக்கும் போன் கால் வந்தது என்று சிவகுமார் கூறுகிறாரா? முதல்வருக்கே போன் செய்து பா.ஜ.க-வுக்கு வரும்படி அழைக்க முடியுமா? பேட்டி அளிக்கிறோம் என்பதற்காக கண்டதையும் உளறுவது சரியா என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close