'கூவத்தூர்' பாணியில் ரிசார்ட்டுக்கு செல்லும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 05:26 pm


தமிழகத்தில் கூவத்தூர் ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டது போல், அணி தாவலை தடுக்க கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று  ரிசார்ட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் பொருட்டு காங்கிரஸ் - ம.ஜ.த இணைந்துள்ளது. அதே நேரத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களில் பா.ஜ.க 104 இடங்களையே கைப்பற்றியுள்ளதால் மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ரூ100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக பா.ஜ.க கூறியதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், 104 எம்.எல்.ஏக்களை கொண்டு ஆட்சி அமைக்கவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளது. இரு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளதால் ஆளுநர் மௌனம் காத்து வருகிறார். 


இதற்கிடையே நாளை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும், அதற்கு பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் வந்து பங்கேற்குமாறும் வாட்ஸ்ஆப்-பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பார் என எடியூரப்பாவும் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், அணி தாவலை தடுக்க காங்கிரஸ், தங்களது எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கர்நாடகாவில் பெங்களூரு- மைசூரு சாலையில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

இன்று மாலை ம.ஜ.தவின் குமாரசுவாமி மற்றும் காங்கிரஸின்  பரமேஸ்வரா ஆகிய இருவரும் ஆளுநரை சந்திக்க இருக்கின்றனர். அப்படி ஒருவேளை ஆளுநர் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையல்லாத பா.ஜ.கவை அழைத்தால் நாளை ராஜ்பவன் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் - ம.ஜ.த தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close