8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் பாரதிய ஜனதா பேச்சுவார்த்தை!

Last Modified : 18 May, 2018 04:56 pm


நாளை கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், மற்றும் ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் பாரதியாய் ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து,  ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி அவர் வழங்கிய கடிதம் இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாரதிய ஜனதா, தனது கட்சியை சேர்ந்த ஆளுநரை வைத்து, கர்நாடகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியமைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் வழங்கிய நிலையில்,  உச்ச நீதிமன்றம் நாளை, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, எதிர்கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க தலைமையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 2 ஜனதா தள கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள், மற்றும் இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close