கர்நாடகா விதான் சவுதாவில் 144 தடை உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 09:38 am


கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, இன்று அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டசபையில் இன்று காலை 11 மணி அளவில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பும் அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கர்நாடக மாநில டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை முன்னிட்டு கர்நாடக சட்டசபை அமைந்துள்ள விதான் சவுதா பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியினை சுற்றி 1 கிமீ தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஐதராபாத்தில் அடைத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் இன்று காலை பெங்களூரு வந்தடைந்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close