• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

அடுத்த 5 ஆண்டுகளுக்கு எடியூரப்பா தான் முதல்வர்: சதானந்த கவுடா

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 10:42 am


அடுத்த 5 ஆண்டுகளுக்கு எடியூரப்பா தான் கர்நாடகாவின் முதல்வராக இருப்பார் என பா.ஜ.க மூத்த தலைவர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.கவின் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. "100 சதவீதம் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்பேன். இன்று மாலை 5 மணிக்கு பா.ஜ.க தொண்டர்கள் வெற்றியை கொண்டாடுவர். கர்நாடக மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் பற்றிய அனைத்து முடிவுகளும் நாளை எடுக்கப்படும்" என எடியூரப்பா உறுதியாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவர் சதானந்த கவுடா கூறுகையில், "இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க வெற்றி பெறுவது உறுதி. அடுத்த 5 ஆண்டுகளுக்கு எடியூரப்பா தான் கர்நாடகாவின் முதல்வராக இருப்பார். இன்று 4.30 மணி வரை காத்திருங்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.கவுக்கு வெற்றி உறுதி" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close