குமாரசாமி பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால்!

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 04:50 pm


கர்நாடக முதல்வராகும் குமாரசாமி பதவியேற்பு விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கர்நாடகாவில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பிறகு, காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. வருகிற 23ம் தேதி குமாரசாமி முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அரசியல் நிகழ்வுகளினால் பா.ஜ.க பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மத்தியில் பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக குமாரசாமி பதவியேற்பு விழாவில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூட இருக்கின்றன. விழாவில் கலந்துகொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும்  ஒன்றிணைய இருப்பதாகவும் பேசப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close