ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இந்தியா திரும்பினார் மோடி!

  Sujatha   | Last Modified : 22 May, 2018 06:35 am


ஒருநாள் பயணமாக நேற்று  ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சு வார்த்தை முடிந்த பின்  இன்று இந்தியாவுக்கு வந்தடைந்தார்.

ரஷ்ய நாட்டு அதிபர் புதின் விடுத்த அழைப்பினை ஏற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஒருநாள் பயணமாக ரஷ்யா சென்றார். பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்த புதின், இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகம் அளிக்கும் என்று கூறினார். இதனை அடுத்து, இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தனர். 

மேலும் ரஷ்ய அதிபர் புதினுக்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவுக்கு ஒரு நிரந்தர உறுப்பினர் உதவியை வழங்குவதில் பிரதான பங்களிப்பை செய்ததற்காக மோடி நன்றி தெரிவித்தார்.இந்த சந்திப்பு குறித்து, பிரதமர் மோடி, நட்பு ரீதியிலான சந்திப்புக்கு விளாடிமர் புதின் என்னை அழைத்ததற்காக நன்றி  என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்றிரவு இந்தியாவுக்கு புறப்பட்டு அதிகாலை 4 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close