கர்நாடகாவின் சபாநாயகராக ரமேஷ் குமார் தேர்வு!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 01:38 pm


கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க 104 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மை இல்லாத போதும் ஆளுநர் அழைப்பிற்கேற்ப எடியூரப்பா கடந்த மே 17ல் முதல்வராக பதவியேற்றார். பா.ஜ.கவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்ற நோக்கத்தில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணிக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்கில் எடியூரப்பா பெரும்பான்மையை உடனே நிரூபிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, ஆட்சி அமைக்க குமாரசாமியை ஆளுநர் அழைக்க, அவர் மே 23ல் முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து இன்று குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் இன்று  நடக்க இருக்கிறது. இன்று பகல் 12.15 மணிக்கு தற்காலிக சபாநாயகா் கே.ஜி.போபையா தலைமையில் சட்டசபை கூடியது. முதலில் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி சாா்பில் ரமேஷ்குமாா், பா.ஜ.க. சாா்பில் சுரேஷ்குமாா் போட்டியிட்டனர். இறுதியில் ரமேஷ் குமார் வெற்றி பெற்று சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  கடைசி நேரத்தில் பாஜகவின் சுரேஷ் குமார் சபாநாயர் தேர்வில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் சபாநாயகர் ரமேஷ் குமார் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.