ஒரு நாளைக்கு 15 -18 மணி நேரம் வேலை செய்யும் பிரதமர் மோடி: அமித் ஷா புகழாரம்!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2018 10:31 pm


உலகிலேயே ஒரு நாளைக்கு 15 மணி முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்யும் ஒரே பிரதமர் மோடி தான் என தேசிய  பா.ஜ.க தலைவர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். 

மத்தியில் பா.ஜ.க அரசு கடந்த 2014ம் ஆண்டு இதே நாளில் தான் ஆட்சி அமைத்தது. இன்றுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று நடந்த விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, "பிரதமர் மோடி இந்தியாவை வளப்படுத்துவதில் முழுவதுமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்திய நாட்டை ஏழ்மை இல்லாத நாடாக மாற்றுவது தான் அவரது குறிக்கோள். 

ஆனால், எதிர்கட்சிகளுக்கோ பிரதமரை இந்த நாட்டை விட்டு, ஆட்சியை விட்டு விலக வைக்க வேண்டும் என்பது தான் குறிக்கோளாக உள்ளது. பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை உழைக்கிறார். இப்படி ஒரு பிரதமரை இந்தியா கண்டதில்லை. அவரது உழைப்பு, கொள்கைகள் பற்றி மக்களுக்கு தெரியும். மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

எனவே வரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close