இன்னும் 20 வருடங்களுக்கு நான் தான்:மாயாவதி திட்டவட்டம்

Last Modified : 28 May, 2018 03:27 am


உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி, தனது பகுஜன் சமாஜ் கட்சியின் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தார்.

முன்னதாக தனது சகோதரர் ஆனந்த் குமாரை துணைத் தலைவராக நியமித்திருந்தார் மாயாவதி. ஆனால், அவரது இந்த முடிவு, கட்சியின் மூத்த தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கட்சியின் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர முடிவெடுத்தார் மாயாவதி. அதன்படி, கட்சியின் தேசிய தலைவரின் உறவினர்கள் யாருமே கட்சியில் பொறுப்பு வகிக்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. 

இது, கட்சியின் மூத்த தலைவர்களிடையே உள்ள அதிருப்தியை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார். ஆனால், தனக்கு வயதாகும் வரை "இன்னும் ஒரு 20 வருடமாவது" கட்சியின் தலைவராக அவரே தொடருவார் என்றும், அதனால் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தலைமை பொறுப்பை பற்றி கனவு காணுவதை நிறுத்த வேண்டும் என்றும் மாயாவதி கூறினார். 

மேலும், நியாயமான இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால், கூட்டணி இல்லாமல் தனியே தேர்தலை சந்திப்பதாகவும் கூறியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close