மன்மோகன் சிங்கை மக்கள் மிஸ் பண்றாங்க: அரவிந்த் கெஜ்ரிவால்

  Newstm Desk   | Last Modified : 31 May, 2018 01:44 pm

people-miss-educated-pm-like-manmohan-singh-arvind-kejriwal

மன்மோகன் சிங் போன்ற நன்கு படித்த பிரதமரையே மக்கள் விரும்புகிறார்கள் என்று அரவிந்த கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது என்பதை பற்றிய செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமரின் அவசியத்தை மக்கள் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். பிரதமர் என்பவர் நன்கு கற்றவராக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 
தற்போது இப்படி கூறும் அரவிந்த கெஜ்ரிவால், மன்மோகன் சிங்கை மகாபாரதத்தில் வரும் 'திரித்ரஷ்ட்ரா' என்று கூறியுள்ளார். தனது ஆட்சியில் நடந்த தவறுகளால் அந்த கதாபாத்திரம் நாளடைவில் பார்க்கும் திறனை இழந்துவிடும். 
மேலும் 2013 அக்டோபர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊழல்வாத காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங்கை மத்தியில் தனது முகமாக பயன்படுத்திக்கொள்கிறது. மன்மோகன் தனது ஆட்சியில் நடக்கும் ஊழலை கவனிக்க தவறிவிட்டார்" என்று பதிவிட்டு இருந்தார். 
2015 டெல்லி சட்டமன்ற தேர்தல் பரப்புரையில், கிரண் பேடி பா.ஜ.கவின் மன்மோகன் சிங் என்று கூறியதும் கெஜ்ரிவால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.