மேகாலயாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் திட்டம்

  Newstm Desk   | Last Modified : 31 May, 2018 02:08 pm

congress-claim-to-form-a-government-in-meghalaya

மேகாலயா அம்பதி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது. 

நான்கு மக்களவை தொகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடகா, மேகாலயா, மகாராஷ்டிரா ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 

மேகாலயாவின் அம்பதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா, தேசிய மக்கள் கட்சியின் சி ஜி மொமினை விட 3,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மியானி மேகாலயாவின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் மகள் ஆவார். அம்பதி தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து மேகாலயாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. தேசியவாத மக்கள் கட்சி 20 இடங்களை பெற்று கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி புரிந்து வருகிறது. இதனால் மேகலாயாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் காங்கிரஸ் உரிமை கோர திட்டமிட்டுள்ளது. 

கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத போதும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர், பா.ஜ.கவை ஆட்சி அமைக்க முதலில் அழைத்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியவில்லை. இதன்படி, தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது. அவ்வாறு ஆளுநர் அழைத்தால் கூட்டணி கட்சிகளின் உதவியோடு, மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close