பிரதமர் ஆசை இல்லை; ராணுவ வீரன் போல செயல்படுவேன்: ஆந்திர முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 08:41 am

not-interested-in-becoming-pm-will-work-as-soldier-cm-naidu

பிரதமராகும் ஆசை எனக்கில்லை, ஒரு நாட்டின் வீரன் போன்றே செயல்பட விரும்புகிறேன் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

நாட்டின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தற்போதுள்ளஎ அரசியல் சூழ்நிலையில் இந்த தேர்தல் அனைத்து தரப்பினராலும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாஜகவும், அத்தேர் நேரத்தில் பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் மாநில கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரா சேகர் ராவ், ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ஒன்றுகூடி மற்ற மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "ஆந்திர மாநிலத்தில் எனது கட்சியை நான் முழு முயற்சி எடுத்து மேலும் வலுப்படுத்தி வருகிறேன். இந்திய அரசியலில் கூட்டணி கட்சியில் எனது கட்சியும் ஒரு அங்கமாக இருக்கும். நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. இந்த நாட்டின் ராணுவ வீரன் போன்று இந்த நாட்டுக்கு  சேவை செய்யவே விரும்புகிறேன்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close