ரஜினியின் சினிமா டயலாக்கை என்கிட்ட சொல்லாதீங்க; நான் அரசியல்வாதி: சு.சுவாமி

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 01:08 pm

subramanian-swamy-press-meet-after-he-met-governor

"ரஜினியின் சினிமா டயலாக்குகளை எல்லாம் என்னிடம் கூற வேண்டாம். அவர் சினிமா நடிகர். நான் ஒரு அரசியல்வாதி" என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களின் பல்வேறு கேவிகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் நுழைந்துள்ள தீவிரவாத சக்திகள் குறித்து ஆளுநர் ராம் நாத் கோவிந்துடன் பேசினேன். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கலவரம் உண்டு பண்ணும் விதத்தில் சில பயங்கரவாத சக்திகள் ஊடுருவி உள்ளார்கள். நக்சலைட்டுகள், விடுதலைப்புலிகள், கிறிஸ்டின் மெஷினரிஸ், ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்டவை இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போதே துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் என்று நான் கூறினேன். கடைசி நாளில் அதுபோல் தான் கலவரம் ஏற்பட்டது.  கூடங்குளத்தில் அணுமின் நிலையம் வரக்கூடாது என வெளிநாட்டு சக்திகள், அரசுகள் போராட்டத்தை தூண்டிவிட்டன. தூத்துக்குடி சம்பவத்தில் பலியானவர்கள் குறித்து  பிரதமர் இரங்கல் தெரிவிக்காதது தொடர்பாக நான் அவரிடம் கேட்கிறேன். 

தமிழக ராஜ்பவன் செலவு மிகவும் குறைந்துள்ளது. 6 ரூபாய் என்றால் அவர் ஒரு ரூபாய் தான் செலவு செய்கிறார். 6:1 என்ற விகிதத்தில் தான் தற்போது செலவு செய்து வருகிறார். அவர் மாநிலம் முழுவதுமாக சுற்றுப்பயணம் செய்வது நல்ல விஷயம். ஒரு ஆளுநர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. அ.தி.மு.கவின் ஆட்சியே சிறப்பாக தான் நடக்கிறது' என்றார். 

நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய போது, "சினிமா நடிகர்கள் அனைவரையும் சிறிது தூரத்தில் தான் வைக்க வேண்டும் என்பது எனது கருத்து. பா.ஜ.கவுடன் ரஜினி கூட்டணி என்பதெல்லாம் உண்மை இல்லை.  சினிமா நடிகர்கள் அறிக்கை மாறி மாறி போகும். அதுபோல் என்னால் மாற்ற முடியாது. ரஜினியின் சினிமா டயலாக்குகளை எல்லாம் என்னிடம் கூற வேண்டாம். அவர் சினிமா நடிகர். நான் ஒரு அரசியல்வாதி. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close