ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்பு: வாய் திறந்தார் பிரணாப் முகர்ஜி!

  Padmapriya   | Last Modified : 03 Jun, 2018 07:22 pm

pranab-mukherjee-s-on-accepting-rss-invite

நாக்பூரில் நடக்க இருக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்க விழா அழைப்பை ஏற்றுக்கொண்டது தொடர்பான கேள்விகளுக்கு பிரணாப் முகர்ஜி பதில் அளித்துள்ளார். 

மேற்கு வங்க மாநில நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, "ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எனக்கு கடிதங்கள் வருகின்றன. 

அங்கு சென்று நான் என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூரில் பேசுவேன். எனக்கு பல்வேறு கடிதங்கள் வந்து உள்ளது, தொலைபேசி அழைப்புக்கள் வந்து உள்ளது. ஆனால் அவைகளுக்கு இதுவரையில் பதிலளிக்கவில்லை" என கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நாக்பூர் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு 25 நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமில் நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்துள்ள 708 தொண்டர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பயிற்சிகள் முடிந்து இந்த முகாமில் இருந்து செல்பவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி வழியனுப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதனை அவர் ஏற்றும் உள்ளார். 

இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரணாப் முகர்ஜி அழைப்பை ஏற்க கூடாது, நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தி வருகிறது ஒருத் தரப்பு, ஆர்.எஸ்.எஸ். அழைப்பை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்ட நிலையில், "சார், நீங்கள் அவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள், தயவுசெய்து அங்கு செல்லுங்கள், அவர்களுடையை கொள்கையில் உள்ள தவறை எடுத்துரையுங்கள்" என்று ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் இது குறித்து மேலிடத்தில் பேசப்படுபவை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடையவை: 

ஆர்.எஸ்.எஸ் விழாவில் பிரனாப் முகர்ஜி - காங்கிரஸ் அதிர்ச்சி!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close