டெல்லியில் உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் மோடியை சந்திக்க முடிவு!!

  சுஜாதா   | Last Modified : 04 Jun, 2018 06:32 am

governor-leaves-for-delhi-to-meet-rajnath-and-pm

டெல்லியில் உள்ள கவர்னர் பன்வாரிலால், கவர்னர் மாநாடு முடிந்த பின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். 

தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில்  கவர்னர், துணை நிலை கவர்னர்களுக்கான மாநாடு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இதில் தேசிய பாதுகாப்பு, பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாநாடு முடிந்த பின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
அப்போது,  தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 13 பேர் குறித்தும், அதேபோல சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகிய  2 சம்பவங்கள் குறித்தும் அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை  குறித்தும் விவாதிக்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close