காவிரி விவகாரம்: மனம் இறங்கினாரா குமாரசாமி? 

  சுஜாதா   | Last Modified : 05 Jun, 2018 07:22 am

both-k-taka-and-tn-farmers-are-important-kumaraswamy

காவிரி விவகாரம் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகம் மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில்  சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சு வார்த்தைக்கு பின் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது.   
காவிரி பிரச்சினையில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அதுபற்றி நாங்கள் பேசினோம். இரு மாநிலங்களும் பரஸ்பரம் இணக்கமான நல்லுறவை தொடர வேண்டும் என்று அவர் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சகோதரத்துவ மனப்பான்மையுடன் இரு மாநிலங்களும் நட்புறவோடு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு என இரு மாநில விவசாயிகளுமே எங்களுக்கு முக்கியமானவர்கள். காவிரி பிரச்சினையில் கர்நாடக விவசாயிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை தான். இவற்றை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். பிரச்சினைகளையும் இரு மாநில விவசாயிகள் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். இவ்வாறு குமாரசாமி கூறினார் 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close