இதுவே சரியான நேரம். எதிர்க்கட்சிகளே ஒன்றிணையுங்கள் - சரத் பவார்

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 03:36 pm

will-be-happy-to-unite-opposition-against-bjp-ncp-chief-sharad-pawar

"பா.ஜ.கவுக்கு எதிராக மாநில காட்சிகள் ஒன்றிணைவதில் மகிழ்ச்சி, இதுவே சரியான நேரம். அனைவரும் ஒன்றிணையுங்கள்" என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஒரு பக்கம் செயல்பட, மற்றொரு பக்கம் மேற்குவங்கம், ஆந்திரா, தெலங்கானாஉள்ளிட்ட மாநில முதல்வர்கள் இணைந்து 3வது அணியை உருவாக்கும் நோக்கில் மற்ற மாநிலகட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். 

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இதற்கு வரவேற்பு அளித்துள்ளார். அவர், "பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். 3வது அணி உருவாவதிலும், இந்த அணியில் நான் சேர்வதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தலா ஒரு இடத்தில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. இது பா.ஜ.கவுக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகும். இதுவே சரியான நேரம். எதிர்க்கட்சிகளே ஒன்றிணையுங்கள்" என தெரிவித்துள்ளார்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close