10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி: ராகுல்

  Newstm News Desk   | Last Modified : 07 Jun, 2018 04:23 am

farmer-loans-will-be-written-off-in-10-days-rahul-promises

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், வெறும் பத்தே நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

இந்த வருட இறுதியில் மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் துவக்கி வைத்தார். அம்மாநிலத்தில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பாரதிய ஜனதாவும், பிரதமர் மோடியும் துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். விவசாய கடன் தள்ளுபடி மற்றும் 6 விவசாயிகள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்கவும் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும், என ராகுல் காந்தி உறுதியளித்தார்.

"காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வரும்போது, வெறும் பத்தே நாட்களில் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். மேலும், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 6 விவாசாயிகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்குமாறு, துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

மேலும், " விவசாயிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாத ஒரு அரசு தேவை தானா. மத்திய பிரதேசத்தில் 1200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. லட்சம் கோடி கணக்கில் கடன் வைத்துள்ள பணக்காரர் யாரவது தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப்பட்டீர்களா?" என்றார் ராகுல்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close