இந்தியா – ரஷ்யாவுக்குமிடையே தபால்தலைகளை கூட்டாக வெளியிடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  சுஜாதா   | Last Modified : 07 Jun, 2018 05:21 am

cabinet-approves-the-joint-issue-of-postage-stamp-between-india-and-russia

இந்தியா – ரஷ்யாவுக்குமிடையே தபால்தலைகளை கூட்டாக வெளியிடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்தியா – ரஷ்யாவுக்குமிடையே  தபால்தலைகளை கூட்டாக வெளியிடுவது தொடர்பாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது. தபால்தலைகள் வெளியிடும் துறையில் பரஸ்பரம் நன்மைப் பயக்கும் செயல்பாட்டு சிறப்பை அடைவதற்கு அஞ்சலக ஒத்துழைப்பை இந்தியா அஞ்சல்துறைக்கும் ரஷ்ய அஞ்சல் துறைக்கும் (ரஷ்ய கூட்டமைப்பின் “மார்கா” என்ற பங்கு நிறுவனம்)  இடையே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் பரஸ்பரம் அக்கறையுள்ள பிரச்சினைகளின் புரிந்துணர்வு அடிப்படையில் அமைகிறது. இருதரப்பு உறவுகளின் அனைத்துப் பகுதிகளிலும் உயர்நிலை ஒத்துழைப்பை இந்தியாவும் ரஷ்யாவும் பெற்றுள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close