எண்கள் சொல்லும் சேதி: 'தூய்மை இந்தியா' எட்டியது என்ன?

  சுஜாதா   | Last Modified : 07 Jun, 2018 04:13 pm

swasth-bharat-sabal-bharat

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 'தூய்மை இந்தியா - பசுமை இந்தியா' திட்டங்களால், சமீபத்திய நிலவரப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளும் சாதனைகளும் இதோ...

தூய்மை இந்தியா திட்டம் - கிராமப்புறம்

* 'தூய்மை இந்தியா திட்டம் - கிராமப்புறம்' 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ல் தொடங்கப்பட்டது. தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை காணவேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்கும் திட்டம்.

* இலக்கு: 2019 அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளிக் கழிப்பிடங்களை அகற்றுதல்.

* திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து (31 மார்ச் 2018 நிலவரப்படி) 6.8 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் நவீனக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

* 266 மாவட்டங்களில் உள்ள 3.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமற்றவையாக (31 மார்ச் 2018 நிலவரப்படி) மாற்றப்பட்டுள்ளன.  

* கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 4,464 கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன.

* துப்புரவு பணிகளின் பரப்பு 2014-ல் 38.70%-ல் இருந்து 21.03.2018 நிலவரப்படி 78.98% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* தனிநபர் கழிப்பறைகளுக்கான ஊக்கத்தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
தூய்மை இந்தியா - கோஷ்

* கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தூய்மை நிலையை மேம்படுத்த, பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் கட்ட முன்னுரிமை.

* பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் அமைக்கவும் பயன்படாத கழிப்பறைகளை புதுப்பிக்கவும் ரூ.365 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா - செஸ்

தூய்மை இந்தியா திட்டத்திற்காக, தூய்மை இந்தியா என்ற பெயரில் கூடுதல் வரி வசூலிக்கப்பட்டு, இலக்கை அடைய   செலவிடப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா - நகர்ப்புறம்

* 4,041 நகரங்கள் மற்றும் நகரப்பகுதிகளை 2019 அக்டோபருக்குள் திறந்தவெளி கழிப்பிடமற்றவையாக மாற்றவும், 100% திடக்கழிவு மேலாண்மைக்காகவும் 02.10.2014 அன்று தொடங்கப்பட்டது.

தூய்மை இந்தியா - சாதனைகள்

* 47.10 லட்சம் வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது.

* 3.18 லட்சம் சமுதாய மற்றும் பொதுக் கழிப்பறைகள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன.

* 2679 நகரங்கள் இதுவரை திறந்தவெளி கழிப்பிடமற்றவையாக அறிவிக்கப்பட்டு, 2,133 நகரங்கள் / நகர்ப்புற உள்ளாட்சிகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்றவையாக, 3-ம் நபர் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

* 62,436 நகர்ப்புற வார்டுகள், 100% அளவுக்கு வீடு வீடாக திடக்கழிவுகள் பெறும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

* கழிவுகளை உரமாக மாற்றும் 145 நிலையங்கள் மூலம் 13.11 லட்சம் டன் உரங்கள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

* கழிவுகளிலிருந்து 88 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

* பல்வேறு திட்டத்தொகுப்புகள் மூலம் இதுவரை ரூ.6,592 கோடி மாநில அரசுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

தூய்மையான கல்வி நிலையங்கள்

* 15.08.2014 முதல் 15.08.2015 வரையிலான ஓராண்டுக் காலத்தில் 2,61,400 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 4,17,796  கழிப்பறைகள் கட்டப்பட்டு இலக்கு முழுமையாக எட்டப்பட்டுள்ளது.

* நாட்டில் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளான இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், வனப்பகுதிகள், 

* மலைப்பகுதிகளில் உள்ள தொலைதூரக் குடியிருப்புகள் மற்றும் மக்கள் நெருக்கடி மிகுந்த குடிசைப்பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களும் இதில் அடங்கும். இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 11.02 லட்சம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 14.31 கோடி மாணவ, மாணவியருக்கு என தனித்தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற குடிநீர் விநியோகம்

* கிராமப்புற குடிநீர் விநியோக பரப்பளவு - 01.04.2014-ல் 73.66% ஆக இருந்த குடிநீர் முழுமையாக விநியோகம் செய்யப்படும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 2017-ல் 78%க்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

* 2014-2017 காலக்கட்டத்தில் 2,70,000 குடியிருப்புகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* கிராமப்புற மக்கள் தொகையில் 56%-க்கும் மேற்பட்டோருக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* 17% வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

* ஆர்சனிக் மற்றும் புளோரைடு கலந்த தண்ணீரால் பாதிக்கப்பட்ட 28,000 குடியிருப்புகளில் 2020-க்குள் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் சார்பு இயக்கம்

* ஆர்சனிக் மற்றும் புளோரைடு கலந்த தண்ணீரால் பாதிக்கப்பட்ட 28,000 குடியிருப்புகளில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் தூய்மையான குடிநீர் வழங்குதல்.

கங்கை தூய்மைப்படுத்துதல்

* தேசிய கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2018 வரை, ரூ.20,601.11 கோடி மதிப்பீட்டிலான 193 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* கங்கை மற்றும் யமுனை ஆற்றங்கரைகளில், 2311.08 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்புக்கான புதிய அமைப்புகளை ஏற்படுத்தவும், 886.88 எம்எல்டி கழிவு சுத்திகரிப்பு அமைப்புகளை சீரமைக்கவும், 4766 கிலோமீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ளுதல் / சீரமைக்க, இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* இதுவரை 20 கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டு, 262 எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், 379.85 கிலோமீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

* ரூ.1216.41 கோடி மதிப்பீட்டில், 37 கரையோர அடக்க ஸ்தலங்கள் மற்றும் மயானங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* கரையோரத் தூய்மைப்பணிகளுக்கான ரூ.15 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்

* நதிகளின் மேற்பரப்பை தூய்மைப்படுத்துவதற்கான ரூ.55.24 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்முயற்சிகள்

* அனைத்து சுற்றுச்சூழல் ஒப்பளிப்புகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் உள்ள பெரிய நகரங்களில் காற்றின் தரத்தை பரிசோதிக்க, தேசிய காற்று தர நிர்ணய அட்டவணை முறை 06 ஏப்ரல் 2015 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

* கழிவு மேலாண்மைக்கான ஆறு ஜோடி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* புலிகள் பாதுகாப்பு அமைப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட புதிய வழிமுறைகளைப் பின்பற்றி, நாடு முழுவதும் உள்ள புலிகளின் நிலை, இணை விலங்குகள் மற்றும் அவற்றுக்கான இரை பற்றிய 3-வது மதிப்பீடு ஜனவரி 2015-ல் வெளியிடப்பட்டது. 2010 கணக்கெடுப்பின் போது 1,706 புலிகள் என்ற நிலையை ஒப்பிடுகையில், 2014 கணக்கெடுப்பின் போது 2,226 புலிகள் கண்டறியப்பட்டிருப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.


 
உஜாலா

* அனைவருக்கும் குறைந்த விலையில் எல்இடி  பல்பு வழங்கும் உன்னத் ஜோதி (உஜாலா) திட்டம் 05.01.2015 அன்று தொடங்கப்பட்டது.

* 07.05.2018 நிலவரப்படி: 29.83 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள் விநியோகம்.

* மின்சார சேமிப்பு ஆண்டுக்கு - 38743 மில்லியன் kWh.

* மிச்சப்படுத்தப்பட்ட செலவுத்தொகை ஆண்டுக்கு ரூ.15,497 கோடி.

* கரியமில வாயு வெளியேற்றம் குறைப்பு ஆண்டுக்கு 3,13,82,026 டன்.

* நெரிசல் நேர தேவை தவிர்ப்பு - 7,757 MW

இந்தத் தரவுகள் அனைத்தும் மத்திய அரசால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவை. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close