எண்கள் சொல்லும் சேதி: 'மேக் இன் இந்தியா' சாதித்தது என்ன?

  சுஜாதா   | Last Modified : 07 Jun, 2018 06:22 pm

make-in-india-to-transform-india-into-a-global-design-and-manufacturing-hub

'புத்துயிர்ச்சி பெற்ற இந்தியா - சுயசார்பு இந்தியா' என்பதை நோக்கமாகக் கொண்ட 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' எனும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சாதித்தவற்றின் பட்டியல் இதோ...

* இந்தியாவை மையமாக மாற்றுவதற்காக 'மேக் இன் இந்தியா' திட்டம், 25 செப்டம்பர் 2014-ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

* இத்திட்டம் மூலம் அரசு - தொழில் துறையினரிடையேயான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

* 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம்' தொடங்கப்பட்டதிலிருந்து, பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

* ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பின் உலக முதலீட்டு அறிக்கையின்படி, 2016-18-ல் வளமான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்தைப் பெற்றுள்ளது.

* உலக வங்கி அறிக்கையின்படி, எளிதில் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் 2016-ம் ஆண்டு 130-வது இடத்தில் இருந்த இந்தியா 30 இடங்கள் முன்னேறி, 2017-ல் 100-ம் இடத்தில் உள்ளது. ஆதாரம்: உலக வங்கியின் எளிதில் தொழில் தொடங்க உகந்த நாடுகளின் அறிக்கை 2018.

* உலகில், உள்நாட்டிலேயே முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் உள்ள 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்திய தொழில்துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகளை அனுமதித்ததே இதற்கு முக்கிய காரணம்.
 
* அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க தொடங்கியதையடுத்து, மிகவும் வெளிப்படையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. 

* முதலீட்டுக்கு உகந்த கொள்கைகள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டு அனுமதிகள் காரணமாக, இந்தியா முதன்முறையாக 2015-2016-ஆம் நிதியாண்டில் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீடுகளை பெற்றுள்ளது; இதுவரை இல்லாத அளவாக 2016-17-ல் 60.08 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

* 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, அந்நிய நேரடி முதலீடு சாதகமான போக்கில் சென்று கொண்டிருப்பதுடன், அந்நிய நேரடி முதலீட்டு வரவு 56% ஆகவும், அந்நிய நேரடி முதலீட்டு பங்குகள் வரவு 68% ஆகவும், அதிகரித்துள்ளது.

* கடந்த 3 நிதியாண்டுகளில் அதிக அளவாக அந்நிய நேரடி முதலீட்டு வரவு (160.7 பில்லியன் டாலர்) - 32% ஆகவும், ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டு வரவு கடந்த 17 நிதி ஆண்டுகளில் (484 பில்லியன் டாலர்) ஆகவும் உள்ளது.
 

2014-15, 2015-16, 2016-17 ஆகிய 3 நிதியாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு நிலையாக அதிகரித்து வந்துள்ளது.
 

அந்நிய நேரடி முதலீட்டு வரவில் சுயாட்சி முறையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தானியங்கி முறையில் (இத்தகைய முதலீடுகளுக்கு அரசு அனுமதி தேவையில்லை) அந்நிய நேரடி முதலீடு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். அரசு மூலமாக வரும் முதலீடுகளும் அதிகரித்துள்ளது.


 
* பாதுகாப்பு தளவாட உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல்,  தொலைத்தொடர்பு , வேளாண்மை, மருந்தியல், விமானப் போக்குவரத்து, வின்வெளி, தனியார் பாதுகாப்பு முகமைகள், ரயில்வே, காப்பீடு மற்றும் ஓய்வூதியங்கள், மருத்துவ சாதணங்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு இந்தியா அனுமதி அளித்து வருகிறது.

* ராணுவத் தளவாட உற்பத்தி தவிர மற்ற பெரும்பாலான துறைகளில் தானியங்கி முறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு (49 சதவீத அந்நிய நேரடி முதலீடு தானியங்கி முறையிலும், 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அரசு வாயிலாகவும்) அனுமதி அளிக்கப்படுகிறது.
 
உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி (பாதுகாப்பு)

* உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அனு ஏவுகனைகள்

* இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ராணுவத் தளவாட தொழில்நுட்பங்கள்
 
தொழில்நுட்ப வளா்ச்சி அடைந்த இந்தியா (விண்வெளித் துறை)

மங்கள்யான் திட்டம்

* செவ்வாய் கிரகத்தை ஆராய இந்தியா  அனுப்பிய இந்த விண்கலம், மூன்றாண்டுகளுக்கு மேலாக, அதன் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சுற்றிவந்துள்ளது. முதல் இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட தகவல்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
 
* இந்தியா 104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது

* விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் முதலாவதாக இந்தியா சாதனைப் படைத்துள்ளது.

* இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ, துருவ செயற்கை கோள் செலுத்து வாகனம் பி.எஸ்.எல்.வி.-சி 37 மூலம், அதிக அளவாக, ஒரே தடவையில் 104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி 2017 பிப்ரவரி 15 அன்று, விண்வெளி ஆய்வு வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது. இதில், 101 செயற்கை கோள்கள், அமெரிக்கா (96), நெதா்லாந்து (1), சுவிட்சா்லாந்து (1), இஸ்ரேல் (1), கஜகஸ்தான் (1) மற்றும் சவுதி அரேபியா (1) போன்ற சா்வதேச வாடிக்கையாளா் நாடுகளுக்கு சொந்தமானவைகளாகும்.
 
தேசிய சூப்பா் கணினி இயக்கம் - நேவ் 1சி

* இந்திய மண்டல கடல்சார் செயற்கை கோள் முறை (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.), நேவ் 1சி (இந்திய சொல் வழக்கில் கடற்பயணத்தைக் குறிக்கும் 'மாலுமி' அல்லது 'கடல் பயணி') என்ற பெயரில் இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கிய மண்டல செயற்கை கோள் ஆய்வு முறையாகும்.

இந்தியா மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ளப் பிராந்தியங்களில் 1500 கிலோ மீட்டா் (930 மைல்கள்) தொலைவிற்கு, இருப்பிடம் மற்றும் நேரம் சார்ந்த சேவைகைளை துல்லியமாக  வழங்கமுடியும்.
 
தொலைத்தொடா்பு செயற்கை கோள்கள்:

'தெற்காசிய செயற்கை கோள்' -  இந்தியா தெற்காசிய நாடுகளுக்கு வழங்கிய அன்பளிப்பாக கருதப்படும் இந்தச் செயற்கை கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அண்டை நாடுகளுக்கு பிரதமரால் அர்ப்பணிக்கப்பட்டது. 'தெற்காசிய செயற்கை கோள்' 2017 மே 5 அன்று ஜி.எஸ்.எல்.வி. -  எஃப் 09 செலுத்து வாகனம் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் தரைப் பயன்பாடு, அண்டை நாடுகளில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

* ஜி.எஸ்.எல்.வி. – Mk-III முதலாவது செலுத்து வாகனம், இந்தியாவின் தொலைத்தொடா்பு செயற்கை கோளான ஜி சாட்-19 செயற்கை கோளை 2017 ஜூன் 15 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரத்தைக் கொண்ட இந்த செலுத்து வாகன தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பதுடன், உயர் தொலைத்தொடர்புத் திறன் கொண்ட ஜி சாட்-19 செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

* ஜி சாட்-17 தொலைத் தொடர்பு செய்றகை கோள் 2017 ஜூன் 29 அன்று, கொருவில் இருந்து ஏரியான் செலுத்து வாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சி-பேன்டு & விரிவுப்படுத்தப்பட்ட சி-பேன்டு, தேடுதல் & மீட்பு சாதனங்கள், செல்போன் தொடர்புக்கான சாதனங்கள் மற்றும் சேவைகளை தொடர்வதற்கும், சுற்றுப்பாதை பின்புலத்தைக் கொண்ட புள்ளிவிவர டிரான்ஸ்பான்டர்கள் போன்றவற்றை இந்தச் செயற்கை கோள் சுமந்து சென்றது. ஜி சாட்-17 செயற்கை கோள், தொலைக்காட்சி ஒளிப்பரப்பு, வி சாட் மற்றும்  எம்.எஸ்.எஸ். பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் தரவுகள் அனைத்தும் மத்திய அரசால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவை. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close