மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்!! 

  சுஜாதா   | Last Modified : 09 Jun, 2018 08:25 am

mission-indradhanush

மத்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2014, டிசம்பர் 25 ஆம் நாள் தடுப்பூசிகள் திட்டத்தை கொண்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் 5 % அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளுக்கு கூடுதலாக தடுப்பூசி தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்காக இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோக்கம்:
* வானவில்லின் ஏழு  நிறங்களைக் குறிக்கும், இந்திரனின் கைஅம்பு என்ற பொருள் தரும், இந்திரதனுஷ் திட்டம் 2020 ஆம் ஆண்டிற்குள் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போட்டுவிடும் இலக்கை கொண்டுள்ளது.  
* கக்குவான், ரனஜன்னி, டெட்டனஸ், இளம்பிள்ளைவாதம், காசநோய், மீசல்ஸ், டீவகை மஞ்சள் காமாலை ஆகியவையை தடுக்ககூடிய 7 வகை நோய்களுக்கு அரைகுறையாக தடுப்பூசி போடப்படுபவர்களும் இந்தத் திட்டத்தின்படி அனைத்து தடுப்பூசிகளையும் பெறுவார்கள்.
.

சாதனைகள்:

இந்திரதனுஷ் இயக்கம் 528 மாவட்டங்களை உள்ளடக்கி நான்கு கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில்:   
*  3.15 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
*  80.58 லட்சம் குழந்தைகள் முழுமையாக நோய் தடுப்புத் திறன் பெற்றனர்.
*  80.63 லட்சம் கருவூற்ற பெண்கள் நோய்தடுப்புத் திறன் பெற்றனர்.
*  91.94 லட்சம் வைட்டமின் ஏ மருந்து வழங்கப்பட்டது.
*  79.73 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
*  2.73 கோடி ஸிங்க் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன.
*  தீவிர இந்திரதனுஷ் இயக்கம் குஜராத் மாநிலம் வாட் நகரில் 2017 அக்டோபர் 8 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.  121 மாவட்டங்கள், 17 நகர்ப்புற பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் 52 மாவட்டங்கள், (24 மாநிலங்களில் மொத்தம் 190 மாவட்டங்கள்/நகர்ப்புற பகுதிகள் ) தீவிர நோய் தடுப்புத் திறன் பிரச்சாரத்திற்கு உட்பட்டவையாகும்.
*  கருவுற்ற மற்றும் குழந்தை ஈன்ற பெண்களுக்கு வலிப்பு நோயை ஒழித்தல்
*  கருவுற்ற மற்றும் குழந்தை ஈன்ற பெண்களுக்கு வலிப்பு நோய் 2015 மே மாதத்தில் நாட்டிலிருந்து முற்றிலுமாக  ஒழிக்கப்பட்டது. சர்வதேச இலக்காக நிர்ணயிக்கப்பட்ட டிசம்பர் 2015-க்கு மிகவும் முன்னதாகவே நமது நாட்டில் இலக்கு எட்டப்பட்டது.

புதிய தடுப்பூசிகள்

போலியோ ஒழிப்பு தடுப்பூசி (ஐபிவி):

*  உலக போலியோ ஒழிப்பு செயல் திட்டத்திற்கு இணங்க 2015 நவம்பரில் ஆறு மாநிலங்களில்  ஐபிவி அறிமுகம் செய்யப்பட்டது. 2016 ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஐபிவி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து 2017 டிசம்பர் வரை சுமார் 3.87 கோடி  ஐபிவி சொட்டு மருந்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளது.

ரோட்டடா வைரஸ் தடுப்பூசி:

*  ரோட்டா வைரஸ் காரணமாக ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த ஆந்திர பிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிஸா ஆகிய நான்கு மாநிலங்களில் மார்ச் 2016ல் தொடங்கப்பட்டது.

*  பின்னர் ஆந்திர பிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிஸா, அசாம், திரிபுரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம் என ஒன்பது மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
2017 டிசம்பர் வரை சுமார் 1.42 கோடி ரோட்டா வைரஸ் தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்பட்டன.

தட்டம்மைத் (எம்ஆர்) தடுப்பூசி:

*  ஒன்பது மாதக் குழந்தைகளிலிருந்து 15 வயது வரை உள்ளவர்களை இலக்காகக் கொண்டு எம்ஆர் தடுப்பூசி இயக்கம் 2017 பிப்ரவரி 5 அன்று கர்நாடகா, தமிழ்நாடு, கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தொடங்கப்பட்டது.

*  தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, ஆந்திர பிரதேசம், சண்டிகர், டாமன் டையூ, தாத்ரா நாகர்ஹவேலி, தெலங்கானா, இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கேரளா ஆகிய 13 மாநிலங்கள் /  யூனியன் பிரதேசங்களில், எம்ஆர் இயக்கம் நிறைவுபெற்றது. (அருணாச்சல பிரதேசத்திலும், ஒடிஸாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. )

*  இந்த மாநிலங்களில் 2018 மார்ச்  வரை சுமார் 7.7 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜப்பானிய மூளையழற்சித் தடுப்பூசி:

*  ஜப்பானிய மூளையழற்சி (ஜேஇ) பற்றிய பிரச்சாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2015ல் வழக்கமான நோய் தடுப்புத் திறன் இயக்கத்தில் ஜப்பானிய மூளையழற்சி பரவலாக காணப்படும். 230 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளையழற்சி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது.

*  ஒரு வயது குழந்தை முதல் 15 வயதுவரை உள்ள சுமார் 15.6 கோடி பேருக்கு ஜப்பானிய மூளையழற்சி தடுப்பூசி போடப்பட்டது. 99.20 லட்சம் குழந்தைகளுக்கு ஜேஇ தடுப்பூசி போடப்பட்ட உத்தரபிரதேசத்தில் ஜேஇ பரவலாக உள்ள 38 மாவட்டங்களில் சிறப்பு ஜேஇ மறு பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

*  வயதுவந்தோருக்கான ஜேஇ பிரச்சார இயக்கம் அடையாளம் காணப்பட்ட 31 மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின்கீழ் சுமார் 3.29 கோடி வயது வந்தோருக்கு ஜேஇ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நுரையீரல் நோய் கூட்டுத் தடுப்பூசி (பிசிவி):

*  குழந்தைகள் இறப்புக்கு பெரிதும் காரணமான நிமோனியா காய்ச்சல் மரணத்தைக் குறைப்பது.

*  இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம் (6 மாவட்டங்கள்) பீகார் (17 மாவட்டங்கள்) என 3 மாநிலங்களில் 2017 மே 13அன்று இந்த தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டது.

*  இதைத் தொடர்ந்து பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்கள் முழுமைக்கும் தடுப்பூசித் திட்டம் விரிவாக்கப்பட்டது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகியவற்றின் பகுதிகளில்  3 ஆண்டுக் காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

*  மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 2018 ஜனவரி வரை 14 லட்சம் பிசிவி தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளன.

ஜனனி சுரக்ஷா யோஜனா

மருத்துவமனைகளில் மகப்பேறு என்பது 47%லிருந்து (டிஎல்எச்எஸ்-5, 2007-08) 78.9%ஆக(என்எப்எச்எஸ்-4, 2015 -16)  அதிகரித்துள்ளது.

இந்தத் தரவுகள் அனைத்தும் மத்திய அரசால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவை. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close