சீனா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!!

  சுஜாதா   | Last Modified : 09 Jun, 2018 08:49 am
pm-modi-arrives-china

சீனாவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இரண்டு நாள் அரசு பயணமாக பிரதமர் மோடி சீனா புறப்பட்டுச்சென்றார்.

சீனாவில் உள்ள குயிங்டோ நகரில் இன்றும், நாளையும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.  இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.  கடந்த ஆண்டுதான் இந்திய நாடு உறுப்பினராக இணைந்தது.  இந்தியா இணைந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால் என்பதால், பிரதமர் மோடி  என்னென்ன விஷயங்களை மாநாட்டில் முன்வைக்கப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.  

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் உள்ள நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து, மோடி இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளித்து கருத்துகளை முன்வைப்பார் என்று தெரிகிறது. மேலும் இந்த பயணத்தின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாமிடிர் புதின் உள்ளிட்ட தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேச இருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close