பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக்க பாஜக முயற்சி?- கிளப்புகிறது சிவ சேனா

  Padmapriya   | Last Modified : 11 Jun, 2018 06:25 am

pranab-mukherjee-will-not-rejoin-politics-says-daughter-after-shiv-sena-comment

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த, பாஜக வியூகம் வகுப்பதாக சிவ சேனா சந்தேகம் எழுப்பியுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸாருமான பிரணாப் முஜர்ஜியை அழைப்பு விடுத்த நிலையில், அவரும் பங்கேற்றது குறித்து சிவசேனா தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இந்த சந்தேகத்தை சிவசேனா கிளப்பியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-வுடன் சிவ சேனா ஆட்சியில் அங்கம் வகுக்கிறது. ஆனாலும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை பல விஷயங்களில் சிவசேனா தொடர்ந்து வெளியிபடுத்தி வருகிறது. 

இந்த நிலையில் சாம்னாவில் வந்துள்ள கட்டுரையில், "வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கு தேவையான இடங்கல் கிடைக்காத சூழ்நிலையை ஊகிக்கும் ஆர்.எஸ்.எஸ். பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தயாராகி வருவதாக நாங்கல் உணர்கிறோம். மேலும் 2019 தேர்தலில் பாஜக பெரிய அளவில் பெரும்பான்மையிலிருந்து பின்னடைவைக் காணும் சூழல் உள்ளது. பாஜக குறைந்தது 110 இடங்களையாவது இழக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

வரும் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் பாஜகவின் கொள்கைக்கு  நம்பிக்கையான அறிவுரையாளரான ஆர்.எஸ்.எஸ்., பிரணாப் முகர்ஜியை அதன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம். இதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கு திடீரென பிரணாப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது என்று கட்டுரை குறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் விளக்கம் அளித்துள்ளார். 

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றது பல்வேறு சர்ச்சையை எழுப்பியது. பிரணாப் மகளும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவருமான ஷர்மிஷ்தா முகர்ஜி கூட இது, பாஜகவின் கையில் விழும் செயல் என்று விமர்சித்தார். 

சிவசேனாவின் கட்டுரைக்கு பதில் அளிக்கும் விதமாக டிவிட்டரில் பதிந்துள்ள ஷர்மிஷ்தா முகர்ஜி, "குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததிலிருந்து எனது தந்தை தீவிர அரசியலில் ஈடுபடவே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close