நாடாளுமன்றத்துக்கு வராத மோடி; வழக்கு தொடர்ந்த ஆம் ஆத்மி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jun, 2018 12:05 am
aap-mp-to-file-petition-to-ensure-modi-s-presence-in-parliament

பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. 

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களைக் காட்டிலும் பிரதமர் மோடி குறைந்த அளவே வெளிநாட்டுக்கு சென்று வருகிறார். ஆனாலும், மோடியின் வெளிநாட்டு பயணத்தை சர்ச்சையாக்கி கமெண்ட் நிறைய செய்யப்படுகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை என்று வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு கடந்த 4 ஆண்டுகளாகவே மிகக்குறைந்த அளவில் வருகை தந்துள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்தில் பிரதமரின் வருகையை கண்காணிக்கவும்,  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பங்கேற்க உத்தரவிடக்கோரி ஆம் ஆத்மியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இதையடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் இதேபோன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கபில் மிஸ்ரா என்பவர்,  டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், டெல்லி சட்டமன்றத்தில் கெஜ்ரிவாலின் வருகைப் பதிவு 10 சதவிகிதமாகத்தான் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை சட்டசபைக்கு செல்லவிடாமல் தடுப்பது மோடியா? அவர் சட்டப்பேரவைக்கு வராமல் இருந்தால் அவரது ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டாமா என பல்வேறு கேள்விகளை அதில் அடுக்கியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close