மகாபாரத கதையை கூறி பா.ஜ.கவை தாக்கிய ராகுல் காந்தி

  Newstm News Desk   | Last Modified : 13 Jun, 2018 10:00 am

modi-has-humilated-his-gurus-says-rahul-gandhi

பா.ஜ.கவினர் தங்களது குருகளை அவமதிக்கின்றனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திரிபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அத்வானியுடன் கைக்குலுக்காமல் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த காட்சி அடங்கிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அதனுடன் பா.ஜ.கவை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “ ஏகலைவன் தனது குரு கேட்டுக்கொண்டதற்காக தனது கட்டை விரலை வெட்டிக்கொண்டார் . ஆனால் இங்கு பா.ஜ.கவினர் பிரதமரின் வழியில் தங்களது குருகளான வாஜ்பாய், அத்வானி, ஜஸ்வந்த் சிங் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவமதித்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "நாங்கள் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டதுண்டு. ஆனால், தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் காங்கிரசின் போர்வீரன் என்ற முறையில் அவரை சந்திப்பதற்கு முன்னுரிமை தந்து வாஜ்பாயை நான் பார்க்கச் சென்றேன். அவர் இந்த நாட்டுக்காக பணியாற்றியவர், பிரதமராக இருந்தவர் என்பதால் நாங்கள் அவரை மதிக்கிறோம். இதுதான் எங்கள் கலாசாரம்.

மோடியின் குருவாக இருந்தவர் அத்வானி. ஆனால், சில நிகழ்ச்சிகளில் தனது குருவான அத்வானியைகூட பிரதமர் மோடி மரியாதை அளிக்காததை நான் பார்த்திருக்கிறேன். மோடியைவிட அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்து வந்துள்ளது. இன்று நான் அத்வானிக்காக வேதனைப்படுகிறேன்" என்றார். 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close