மோடிக்கு பதிலடி கொடுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி

  சுஜாதா   | Last Modified : 14 Jun, 2018 06:14 am

kumaraswamy-replied-to-pm-modi-s-fitness-challenge

மோடியின் பிட்னஸ் சவால் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தான் தினமும் செய்யும் உடற்பயிற்சி மற்றும் யோகா  வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று  வெளியிட்டார். மேலும் இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஹஷ் டேக் செய்து பிரதமர் மோடி பிட்னஸ் சவால் விடுத்து இருந்தார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "அன்புள்ள பிரதமர் மோடிக்கு, என்னுடைய உடல்நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்தியதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் உடற்தகுதி மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன், உடற்தகுதி அவசியம் என்பதை நான் ஆதரிக்கிறேன். என்னுடைய தினசரி உடற்பயிற்சியில் யோகாவும், டிரட்மிலில் ஓடுவதும் முக்கிய அங்கமாக இருக்கின்றன. ஆதலால், என்னுடைய உடல்நலத்தைக் காட்டிலும், இப்போது மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிட்னஸில்தான் அதிகமான அக்கறை எனக்குத் தேவை. அதற்கு உங்களுடைய ஆதரவும் தேவை". இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டு  விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார். 

இதனை தொடர்ந்து சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை  ட்விட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார். இந்த சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று  உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close