நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்!

  Padmapriya   | Last Modified : 14 Jun, 2018 08:52 pm

ed-requests-interpol-to-issue-red-corner-notice-against-nirav-modi

வங்கி கடன் மோசடியில் சிக்கிய வைர வியாபார அதிபர் நீரவ் மோடிக்கு எதிராக சி.பி.ஐ. , ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பிரபல வைரநகை வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் புகார் கூறியது. இதையடுத்து நீரவ் மோடி, இந்தியாவை விட்டு குடும்பத்தோடு வெளியேறி தலைமறைவாக உள்ளார். 

இந்த வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக நிரவ் மோடி, மெகுல்சோக்ஸி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்திவரும் நிலையில், கடந்த மாதம் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. 

இந்த நிலையில்  நீரவ் மோடி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,  இன்டர்போல் உதவியுடன் வெளிநாட்டில் இருக்கும் நீரவ் மோடி, மெகுல்சோக்ஸி ஆகியோரை பிடிக்க இவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த ரெட் கார்னர் நோட்டீஸ், இன்டர்போலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இன்டர்போல் எதற்கு?

இன்டர்போல் என்பது, சர்வதேச போலீஸ் அமைப்பு. இதில் உள்ள 190 நாடுகளில் இந்தியாவும் ஓர் அங்கம். பிரான்ஸ் உள்ள லியான் நகரில் இண்டர்போலின் தலைமையகம் உள்ளது.  உறுப்பு நாடுகளால் தேடப்படும் குற்றவாளி, வேறு நாடுகளில் இருந்தால் அவரை கைது செய்ய, இன்டர்போல் மூலம் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். 

இதையடுத்து, உறுப்பு நாடுகள், சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய இன்டர்போல்,உதவும். இன்டர்போல், 8 வகையான நோட்டீஸ்களை பிறப்பிக்க முடியும். குற்றங்களின் தன்மைக்கேற்ப, சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கறுப்பு, ஆரஞ்சு, ஊதா ஆகிய நிறங்களில், நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்படுகின்றன. 

இதில், சிவப்பு நோட்டீஸ் தேடப்படும் நபரின் இடத்தை கண்டுபிடித்து, உரிய நாட்டிடம் சரணடைய செய்யும் பணியை இன்டர்போல் மேற்கொள்ளும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close